தமிழ்நாட்டில் இராதாபுரத்தில் 6.86 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 303 நுண் திறன் வகுப்பறைகளை முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நுண்திறன் வகுப்பு அறைகளைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்டமன்றத் தொகுதி என்ற பெருமையை இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி பெற்றுள்ளது.
297 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் நுண்திறன் வகுப்பறைகள் உருவாக்கப் பட்டுள்ளன.