TNPSC Thervupettagam
December 15 , 2021 952 days 527 0
  • வளர்ந்து வரும் நாடுகளின் இளம் கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படும் ராமானுஜன் பரிசானது (2021) இந்தியக் கணிதவியலாளர் நீனா குப்தா என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • கேண்முறை அல்லது பொருத்த முறை இயற்கணித வடிவியல் மற்றும் பரிமாற்ற இயற்கணிதம் (affine algebraic geometry and commutative algebra) ஆகியவற்றில் இவரது சிறந்தப் பங்களிப்பிற்காக வேண்டி இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • பேராசிரியர் நீனா குப்தா, கொல்கத்தாவிலுள்ள இந்தியப் புள்ளி விவரக் கல்வி நிறுவனத்தில் பணி புரியும் ஒரு கணிதவியலாளர் ஆவார்.
  • இராமானுஜர் பரிசினை வென்ற 3வது பெண்மணி இவர் ஆவார்.
  • இந்த விருதானது முதன்முறையாக 2005 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது அப்துஸ் சலாம் சர்வதேச தேற்ற இயற்பியல் மையத்தினால் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சர்வதேச கணித ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்