கோவா அரசாங்கமானது தனது கடலோர மாநிலத்தில் மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு விரைந்து சேவையை அளிப்பதற்காக இருசக்கர வாகன மருத்துவ ஊர்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவா முதல்வர் பாரிக்கர், சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே முன்னிலையில், கடலோரப் பகுதிகள் போன்ற உயர் ஆபத்து கொண்ட இடங்களில் ஈடுபடுத்த உள்ள20 இரு சக்கர வாகன மருத்துவ ஊர்திகளை தொடங்கி வைத்தார்.
இந்த இருசக்கர வாகனங்களானது பிராண வாயு சிலிண்டர்கள் உட்பட மருத்துவ வசதிகளுடன் பொருத்தப்பட்டு இருக்கும்.