TNPSC Thervupettagam

இருண்ட பகுதியில் உருவாக்கப்பட்ட ஆக்ஸிஜன்

August 12 , 2024 104 days 168 0
  • அறியப்படாத ஒரு செயல்முறையானது ஒளிச்சேர்க்கை நிகழ ஏதுவான சூழல் இல்லாத  உலகப் பெருங்கடல்களின் ஆழமானப் பகுதிகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது.
  • அறிவியலாளர்கள் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் சில சோதனைகளை மேற்கொண்டனர் என்ற நிலையில் சில இடங்களில் ஆக்ஸிஜன் செறிவு குறைவதற்குப் பதிலாக அங்கு ஆக்சிஜன் அளவு வேகமாக அதிகரித்ததை அவர்கள் கவனித்தனர்.
  • அவர்கள் பல் கனிம செறிவு பகுதிகளின் இயற்பியல் பண்புகளை மதிப்பிட்டதன் மூலம், அவற்றின் மேற்பரப்புகள் 0.95 V வரையிலான மின்னழுத்தத்தைக் கொண்டு இருப்பதைக் கண்டறிந்தனர்.
  • ஒரு நீர் மூலக்கூறைப் பிரிக்க 1.5 V மின்னழுத்தம் தேவைப்படுகிறது.
  • மின்கலத்தினைப் போல பல செறிவு பகுதிகள் நெருக்கமாக இருந்தால் மின்னழுத்தம் உருவாகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
  • பல் கனிம நிறைவுப் பகுதிகள் என்பது இரும்பு, மாங்கனீசு ஹைட்ராக்சைடுகள் ஆகியவற்றின் செறிவுகள் மற்றும் பாறை ஆகியவை கடல் தளத்தின் பல பகுதிகளில் ஓரளவு மூழ்கிக் காணப்படுகின்றன.
  • அவற்றின் செறிவு ஒரு சதுர மீட்டருக்கு 10 கிலோ என்ற அளவினைத் தாண்டினால், அவற்றை வெட்டி எடுப்பது பொருளாதார ரீதியாக நன்கு சாத்தியமானதாகக் கருதப் படுகிறது.
  • கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலம் ஆனது உலகின் மிக அதிகளவிலான பல் கனிம மிகைப் பகுதிகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
  • இதில் 6 பில்லியன் டன் மாங்கனீஸ் மற்றும் 200 மில்லியன் டன்களுக்கும் அதிகமான செம்பு மற்றும் நிக்கல் ஆகியவை அடங்கும்.
  • கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தின் சுமார் 17% பகுதியில் சீனா மட்டும் பல் கனிம முடிச்சுகளை சேகரிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்