TNPSC Thervupettagam

இருதரப்பு முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் (BIPA)

January 22 , 2020 1677 days 679 0
  • இந்தியாவுடனான இருதரப்பு முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Bilateral Investment Protection Agreement - BIPA) ஆராய ஐரோப்பிய ஒன்றியமானது (European Union - EU) விருப்பம் தெரிவித்துள்ளது.
  • இது முன்மொழியப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (free trade agreement - FTA) இருந்து மாறுபாடு கொண்டதாக இருக்கும். இந்த BIPA ஆனது தற்பொழுது பேச்சுவார்த்தைகள் மூலம் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறும் நிலையில் உள்ளது.
  • 2007 ஆம் ஆண்டில், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் ஒரு பரந்த நோக்கு அடிப்படையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (Bilateral Trade and Investment Agreement - BTIA) தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.

BIPA பற்றி

  • இது ஒரு இருதரப்பு ஒப்பந்தமாகும். இரு நாடுகளிலும் உள்ள நிறுவனங்களால் இரு நாடுகளைச் சேர்ந்த பிராந்தியங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் பரஸ்பர ஊக்கம், ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இரு நாடுகளுக்கும்  இடையே மேற்கொள்ளப்படும் ஒரு ஒப்பந்தம் என்று வரையறுக்கப்படுகின்றது.
  • இந்தியத் தரப்பில், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் இந்தியாவில் மூலதன ஓட்டத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ள இந்திய முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான வணிகச் சூழலையும் வழங்குகின்றது.
  • இந்தியாவானது 1994 ஆம் ஆண்டில் இங்கிலாந்துடன் முதலாவது BIPAவில் கையெழுத்திட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்