TNPSC Thervupettagam

இருப்பிடத்தை (வாழும் இடம்) அடிப்படையாகக் கொண்டு பணி இட ஒதுக்கீடு

August 25 , 2020 1463 days 642 0
  • சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநில முதல்வரான சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் அந்த மாநிலத்தின் அரசுப் பணிகள் அனைத்தும் அம்மாநிலத்தின் மைந்தர்களுக்குமட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.                                                                                                                                                                                  
  • ஆனால் இந்திய அரசியலமைப்பின் பின்வரும் சரத்துகள் பிறப்பிடத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்கின்றது.
  • சரத்து 16 : இந்த சரத்தானது பிறப்பிடம் அல்லது இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலங்கள் அரசு வேலைவாய்ப்பு விவகாரங்களில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்கின்றது.
  • சரத்து 16(2) : இது ஒரு மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு () பதவியைப் பொறுத்த வரையில் எந்தவொரு குடிமகன்களும் மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறப்பிடம், இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப் படக் கூடாது என்று கூறுகின்றது.
  • சரத்து 16(3)-ல் உள்ள விதிவிலக்கு : இந்தப் பிரிவானது எந்தவொரு மாநிலத்திலும் அரசுப் பணிகளுக்காக வேண்டி இருப்பிடம்குறித்து குறிப்பிடப் பட்டுள்ள ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம் என்ற விலக்கு அளித்துள்ளது.
  • எனினும், இது நாடாளுமன்றத்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதனை மாநிலச் சட்டமன்றங்கள் மேற்கொள்ள முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்