சமீபத்தில் இந்திய இரயில்வேயானது ஒரு புதிய இரும்புத் தாதுக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தக் கொள்கையானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 அன்று நடைமுறைக்கு வர உள்ளது.
இரும்புத் தாதுக் கொள்கையானது தாது அடுக்குகளின் ஒதுக்கீடு மற்றும் இரும்புத் தாதுவைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றை நிர்வகிக்கின்றது.
இந்தக் கொள்கையானது உள்நாட்டு உற்பத்திச் செயல்பாடுகளுக்காக வேண்டி இரும்புத் தாதுவின் இயக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்க இருக்கின்றது.
இரும்புத் தாதுவானது இந்திய இரயில்வேயின் 2வது மிக முக்கிய இயக்கப் பொருளாக உள்ளது.
இரும்புத் தாது மற்றும் எஃகு ஆகியவை இணைந்து இந்திய இரயில்வேயின் மொத்த சரக்கு இயக்கத்தில் 17% அளவினைக் கொண்டுள்ளது.
சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, தமிழ்நாடு, இராஜஸ்தான் ஆகியவை இரும்புத் தாதுவை உற்பத்தி செய்யும் மிக முக்கிய மாநிலங்களாகும்.