TNPSC Thervupettagam

இரும்புத் தாதுக் கொள்கை

January 21 , 2021 1278 days 624 0
  • சமீபத்தில் இந்திய இரயில்வேயானது ஒரு புதிய இரும்புத் தாதுக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தக் கொள்கையானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 அன்று நடைமுறைக்கு வர உள்ளது.
  • இரும்புத் தாதுக் கொள்கையானது தாது அடுக்குகளின் ஒதுக்கீடு மற்றும் இரும்புத் தாதுவைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றை நிர்வகிக்கின்றது.
  • இந்தக் கொள்கையானது உள்நாட்டு உற்பத்திச் செயல்பாடுகளுக்காக வேண்டி இரும்புத் தாதுவின் இயக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்க இருக்கின்றது.
  • இரும்புத் தாதுவானது இந்திய இரயில்வேயின் 2வது மிக முக்கிய இயக்கப் பொருளாக உள்ளது.
  • இரும்புத் தாது மற்றும் எஃகு ஆகியவை இணைந்து இந்திய இரயில்வேயின் மொத்த சரக்கு இயக்கத்தில் 17%  அளவினைக் கொண்டுள்ளது.
  • சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, தமிழ்நாடு, இராஜஸ்தான் ஆகியவை இரும்புத் தாதுவை உற்பத்தி செய்யும் மிக முக்கிய மாநிலங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்