TNPSC Thervupettagam

இரும்பு மனிதர் கிருஷ்ண பிரகாஷ்

April 2 , 2023 476 days 275 0
  • ‘நீரில் மூழ்குவதைத் தடுக்கும் விழிப்புணர்வு’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்தியக் காவல்பணி அதிகாரி கிருஷ்ண பிரகாஷ், மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவு வாயில் (கேட்வே) முதல் எலிபெண்டா குகை பகுதி வரையிலான தொலைவினை நீந்தி கடந்தார்.
  • இந்த 16.20 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 5 மணி 26 நிமிடங்களில் நிறைவு செய்து வரலாற்றில் இவ்வாறு செய்த முதல் நபர் என்ற சாதனையைப் படைத்தார்.
  • 2017 ஆம் ஆண்டில், அவர் உலகின் மிகவும் சவாலான விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான அயர்ன்மேன் டிரையத்லானை நிறைவு செய்தார்.
  • இந்தச் சாதனையானது பிரகாஷுக்கு ‘இரும்பு மனிதன்’ என்ற பட்டத்தையும் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் வாய்ப்பினையும் பெற்றுத் தந்தது.
  • இந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் இந்திய அரசுப் பணியாளர், குடிமைப் பணியாளர் மற்றும் சீருடைப் பணி அதிகாரி இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்