“விதிவிலக்கான சூழ்நிலைகளின்” (Exceptional Circumstance) வழக்குகளை விசாரிப்பதற்கான தனிநபர் அமர்வினை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாய (நடைமுறை மற்றும் செயல்முறை) விதிகள் 2011-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் “விதிவிலக்கான சூழ்நிலைகள்” எவை என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.
தேசிய பசுமைத் தீர்ப்பாய (நடைமுறை மற்றும் செயல்முறை) விதிகள் 2011-ன் படி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஒவ்வொரு கிளைகளும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். அவர்களில் குறைந்த பட்சம் ஒருவர் நீதித்துறையை சேர்ந்தவராகவும் ஒருவர் நிபுணராகவும் இருத்தல் வேண்டும்.
NGT-ன் தலைமை மற்றும் மண்டலக் கிளைகளில் உள்ள பணியிடத்தை நிரப்பாமல் மத்திய அரசு உள்ளதென உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிகளின் மீறுதல்களால் மக்களுக்கும், அவர்களின் சொத்துக்களுக்கும் உருவாகும் சேதங்களுக்கு இழப்பீடு பெறுதல் போன்றவை தொடர்பான வழக்குகளை விரைவாக மற்றும் திறன் விளைவோடு தீர்த்து வைப்பதற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்படுத்தப் பட்டது.
இது 2010 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இதன் தலைமையிடம் டெல்லியில் அமைந்துள்ளது.
போபால், புனே, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு இடங்களில் இவற்றின் மண்டல கிளைகள் உள்ளன.
NGT சட்டத்தின் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டுள்ள சட்டங்களின் கீழ் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சிவில் நீதிமன்றங்கள் எடுத்துக் கொள்ள தடை உள்ளது.
வனஉயிர் பாதுகாப்பு சட்டம்- 1972, இந்திய வனச்சட்டம்- 1927 மற்றும் வனம், மரங்களின் பாதுகாப்பு தொடர்பான மாநில அரசுகளின் பல்வேறு சட்டங்கள் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க NGT- க்கு அதிகாரம் கிடையாது.
1908-ன் சமூகவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Civil Procedure) கீழ் வரையறுக்கப்பட்ட செயல்முறைகளோடு பிணைந்து NGT செயல்படுவதில்லை.
இயற்கை நியதியின் கோட்பாடுகளின் படி [Principle of Natural Justice] NGT வழிநடத்தப்படுகின்றது.
பின்வரும் சட்டங்களின் கீழ் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்புடைய அனைத்து சிவில் வழக்குகளையும் விசாரிக்க NGT- க்கு அதிகாரம் உள்ளது.
தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டம் 1974
வனப்பாதுகாப்பு சட்டம் 1980
காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு சட்டம்) 1981