வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூரின் உக்ருல் (Ukhrul) பகுதியிலும், நாகாலாந்தின் டியேன்சங் (Tuensang) பகுதியிலும் இரு புதிய இஞ்சி இனங்களை தாவரவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்விரு இஞ்சி இனங்களும், இவ்விரு மாநிலங்களின் மியான்மருடனான எல்லையில், மிகவும் கிழக்கை ஒட்டி அமைந்துள்ள இரு மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்விரு இஞ்சி தாவரங்களும் ஜிஞ்ஜிபெரேஸியே (Zingiberaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை. நம்முடைய பயன்பாட்டு இஞ்சியும் (Zingiber officinale) இக்குடும்பத்தையேச் சேர்ந்தவையாகும்.
நாகலாந்தில் கண்டறியப்பட்டுள்ள இஞ்சி இனமானது ஓர் ஒட்டுண்ணியாகும் (epiphyte). இவை உயரமான மரங்களின் மேல் வளரும்.
மணிப்பூரில் கண்டறியப்பட்டுள்ள இஞ்சி இனமானது மணிப்பூரின் ஷிருய் மலைகளின் (Shirui Hills) பெரும் பாறைகளிலும் (Boulders), பாறை பிளவு வெடிப்புகளிலும் (rock crevices), மட்கு கரிமம் செறிந்த மண் பகுதிகளிலும் (humus rich soil) காணப்படுகின்றன.