TNPSC Thervupettagam

இரு வழிகாட்டு அமைப்புகள்

November 7 , 2017 2446 days 819 0
  • BeiDOU - 3M1 மற்றும் BeiDOU - 3M2 எனப் பெயரிடப்பட்ட இரு BeiDOU – 3 வரிசை செயற்கைக் கோள்களை லாங் மார்ச் – 3B எனும் ஒரே இராக்கெட் மூலம் தென்மேற்கு சிசுவான் மாகாணத்தின் சிசாங் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து வெற்றிகரமாக சீனா  விண்ணில் ஏவியுள்ளது. ஏவப்பட்ட இந்த இரு புதிய செயற்கைக் கோள்களும் சீனாவின் BeiDOU செயற்கைக்கோள் வழிகாட்டு அமைப்பின் (Navigation System) மூன்றாவது கட்டமாகும்.
  • இந்த வழிகாட்டு அமைப்பானது சீனாவின் பாதை மற்றும் மண்டலத் திட்டத்தில் [BRI – Belt and Road Initiative] இணையும் நாடுகளுக்கு வழிகாட்டு சேவையை அளிக்க உள்ளது. 2022-ல் முழுமையான உலக வழிகாட்டு அமைப்பை உருவாக்குவதற்காக சீனா மேலும் 30 செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது.
  • இதன் மூலம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்து சொந்த வழிகாட்டு அமைப்பைக் கொண்ட மூன்றாவது நாடாக சீனா உருவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்