TNPSC Thervupettagam

இறக்குமதியை குறைக்க நிபுணர்குழு நியமனம்

July 14 , 2018 2330 days 655 0
  • இறக்குமதி மீதான சார்பை குறைப்பதற்காக கொள்கை முடிவுகளையும் பலதரப்பட்ட இதர விஷயங்களையும் அடையாளம் கண்டிட அமைச்சரவைச் செயலாளர்K. சின்கா தலைமையில் உயர் நிபுணர்குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது.
  • நாட்டிற்குள்ளே தயாரிக்கப்படக் கூடிய பொருட்களை அடையாளம் கண்டு அவற்றின் இறக்குமதியை குறைத்திட இக்குழு பல வழிகளை பரிந்துரைக்கும்.
  • இந்த நிபுணர் குழு, வர்த்தகத் துறை, தொழிற் கொள்கை மற்றும் மேம்பாடு, வருவாய், திறன் மேம்பாடு, ராணுவ உற்பத்தி, பெட்ரோலியம், எஃகு, மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு ஆகிய துறைகளின் செயலாளர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
  • சராசரியாக, இந்திய இறக்குமதியின் மதிப்பு வருடத்திற்கு ஏறக்குறைய 450 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
  • 2019-18 நிதியாண்டில் 460 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை 20 சதவிகித அளவிற்கு இறக்குமதியின் மதிப்பு அதிகரித்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்