இஸ்ரோ நிறுவனமானது புஷ்பக் எனப்படும் தனது RLV (மறுபயன்பாட்டு ஏவு கலம்) வாகனத்தின் இரண்டாவது தரையிறக்க சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டு உள்ளது.
புஷ்பக் இசான் SUV (சாலைப் பயன்பாடுகள் மற்றும் இதர நிலப்பரப்புப் பயன்பாட்டுச் சார்ந்த வாகனம்) அளவிலான இறக்கைகள் கொண்ட ஒரு ஏவு கலமானது, "சுதேசி விண்வெளி கலம்" என்று அழைக்கப்படுகிறது.
மறுபயன்பாட்டு ஏவு கலங்கள் பிரிவில் பல செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான நாட்டின் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக விமானப்படை ஹெலிகாப்டரில் இருந்து இந்த ஏவு கலம் இறக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.