இறந்த கொடையாளரிடமிருந்து கருப்பை மாற்றத்தின் முதல் குழந்தை
December 7 , 2018 2180 days 639 0
பிரேசில் நாட்டின் மருத்துவர்கள் உலகில் முதல் முறையாக, இறந்த கொடையாளரிடமிருந்து கருப்பையைப் பெற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
45 வயதுடைய மூளைச்சாவு அடைந்த பெண்ணிடமிருந்து கருப்பை மாற்று சிகிச்சை நடைபெற்றதையடுத்து 2017-ல் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.
இந்த கருப்பை மாற்று சிகிச்சையானது 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரேசில் நாட்டின் சா போலோவில் 10 மணி நேரம் நடைபெற்றது. குழந்தையானது 2017ஆம் ஆண்டு டிசம்பரில் பிறந்தது.