TNPSC Thervupettagam

இறப்பிலிருந்து இரண்டு முறை மீளுதல்

May 14 , 2019 2024 days 713 0
  • சுமார் 1,36,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன அல்டப்ரா வெள்ளைத் தொண்டையுடைய ரெயில் (Aldabra white-throated rail) பறவையானது இருமுறையாக மீண்டும் பிறப்பெடுத்துள்ளது.
  • இதனை ஆராய்ச்சியாளர்கள் பன்முறைப் பரிணாமம் என்று பெயரிட்டுள்ளனர்.
  • இது வெவ்வேறு காலகட்டங்களில் அதே மூதாதையரிலிருந்து அதேபோன்ற அல்லது அதற்கு இணையான உடல் அமைப்புகள் மீண்டும் பரிணாமம் பெறுவதாகும்.
  • இது இந்தியப் பெருங்கடலின் அல்டப்ரா பவளத் தீவில் வாழும் கோழி அளவிலான ஒரு பறக்க முடியாத பறவையாகும்.
  • இது மடகாஸ்கரில் மட்டுமே காணப்படுகின்றது. ஆனால் இந்தப் பறவையின் புதை புடிவங்கள் பின்வரும் காலகட்டத்தில் அல்டப்ரா பவளத் தீவில் காணப்பட்டன.
    • இரண்டு வெவ்வேறு கால கட்டங்கள்
    • பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொன்றும் தனியாக பிரிந்த கால கட்டங்கள்.
  • புதைபடிவ ஆதாரத்துடன் இணைந்து அல்டப்ராவின் தனித்துவ மற்றும் பழமையான தொல்லியல் துறை பதிவுகளானது கடல் மட்டங்களின் மாற்றங்கள் இந்தப் பறவை இனம் அழிந்து போவதற்கும் மற்றும் மறுகுடியேற்ற நிகழ்வுகளுக்கும் காரணமாக இருப்பதைக் காட்டுகின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்