தமிழ்நாடு அரசு ஆனது சமீபத்தில் இறப்பு மற்றும் ஓய்வூதியப் பணிக்கொடைக்கான அதிகபட்ச வரம்பை (DCRG என அறியப்படுவது) 20 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
இந்தத் திருத்தம் ஆனது இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இது ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப உள்ளது.
இந்திய அரசானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அதற்குப் பின்னோக்கியத் தேதிகளிலும் செல்லுபடியாகும் வகையில் 25% என்ற ஒரு அளவினை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 84,000 ரூபாய் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் அல்லது இறப்பு பணிக் கொடை கிடைக்கும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பெரும்பாலான ஊழியர்கள் இந்த உயர்வைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள்.
ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவை தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், 1978 மற்றும் பணிக்கொடைச் சட்டம், 1972 எனப்படுகின்ற இரண்டு வெவ்வேறுச் சட்டங்கள் மற்றும் விதிகள் மூலம் கையாளப்படுகிறது.