உள்நாட்டுத் தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தானியங்கி வான் பயண கட்டுப்பாட்டு அமைப்பு (Automatic Flight Control System – AFCS) பொருத்தப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டரின் முதல் பயணத்தை ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் அரசின் வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தால் AFCS தொழிற்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
AFCS என்பது நான்கு அச்சு டிஜிட்டல் வான் பயண கட்டுப்பாட்டு (Digital Four Axis Flight Control System) அமைப்பாகும்.
ஹெலிகாப்டரின் தானியங்கு விமானி முறையையும் (Auto-pilot Modes), ஹெலிகாப்டரின் பயணக்கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மை பெருக்குதல் செயல்பாட்டையும் இந்த அமைப்பு மேற்கொள்ளவல்லது.