TNPSC Thervupettagam

இலங்காமலா சைவ சமய மையம் – ஆந்திரப் பிரதேசம்

March 9 , 2025 24 days 95 0
  • மைசூரில் உள்ள இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) ஆனது, இலங்காமலா வனவிலங்கு சரணாலயத்தில் பண்டைய காலக் கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய காலப் பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளது.
  • சித்தமாத்ரிகா, சங்கு எழுத்து வடிவம் மற்றும் தேவநாகரியில் எழுதப்பட்ட 12 சிட்டை / முத்திரைக் கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
  • இவை கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையிலானவையாகும்
  • வட இந்தியப் பகுதி பக்தர்கள் வருகை தரும் ஒரு முக்கிய சைவ யாத்திரை மையமாக இலங்காமாலா இருந்தது என்பதை இது குறிக்கிறது.
  • அரிய சங்க எழுத்து வடிவங்களில் எழுதப்பட்ட 14 மற்றும் பிராமி எழுத்து வடிவில் எழுதப் பட்ட ஒன்று உட்பட சுமார் 15 கூடுதல் சிட்டைக் கல்வெட்டுகளை ஆய்வுக் குழு அடையாளம் கண்டுள்ளது.
  • ஆக இராயலசீமா பகுதியில் சங்க எழுத்து வடிவங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகளின் முதல் கண்டுபிடிப்பு இதுவாகும்.
  • இது ஒரே பாறையில் செதுக்கப்பட்ட வகையில் இரு வெவ்வேறு காலக் கட்டங்களைச் சேர்ந்த 2 கல்வெட்டுகள் ஆகும்:
  • இதில் பிராமி எழுத்து வடிவில் எழுதப்பட்ட 4 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த ஒன்று மற்றும் சங்க எழுத்து வடிவில் எழுதப் பட்ட சுமார் 6 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த மற்றொன்றும் உள்ளது.
  • இது தென்னிந்தியாவில் எழுந்த எழுத்து வடிவப் பாணிகளின் பரிணாமம் பற்றிய சில நுண்ணறிவுகளை வழங்குகிறது.
  • இந்தக் குழுவானது மூன்று பாறை உறைவிடங்களையும் கண்டறிந்துள்ளது, அவற்றில் ஒன்று வரலாற்றுக்கு முந்தையப் பாறை ஓவியங்களைக் கொண்டுள்ளது.
  • இந்தத் தளம் ஆனது பெருங்கற்காலம் (இரும்பு வயது) மற்றும் முற்கால வரலாற்றுக் காலங்களுக்கு (கி.மு. 2500 – கி.பி. 2 ஆம் நூற்றாண்டு) முந்தையதாக நம்பப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்