இலங்கையின் குடியரசுத் தலைவர் மைத்திரி பால சிறீசேனா ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி அப்பதவியில் முன்னாள் குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சேவை புதிய பிரதமராக அமர்த்தியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கேவின் ஒன்றுபட்ட தேசியக் கட்சியுடனான கூட்டணி அரசிற்கான ஆதரவை ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனாவின் ஒன்றுபட்ட மக்கள் சுதந்திரக் கூட்டணி திரும்பப் பெற்றுள்ளது.
இந்த கூட்டணி அரசானது 2015-ல் ரணில் விக்கிரமசிங்கேவின் ஆதரவோடு சிறீசேனா குடியரசுத் தலைவராக பதவியேற்ற பொழுது ஆரம்பிக்கப்பட்டது.