தமிழ்நாடு அரசானது, இம்மாநிலத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் வைத்து இருக்கும் அடையாள அட்டைகளை மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்வதற்கான செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.
19,600க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 57,300 இலங்கை அகதிகள் 103 மறுவாழ்வு முகாம்களிலும், தமிழ்நாடு முழுவதுமாக அமைந்துள்ள பல்வேறு சிறப்பு முகாமிலும் வசித்து வருகின்றனர்.
ஓர் ஆய்வின்படி, அவர்களில் 45% பேர் இந்தியாவில் பிறந்தவர்கள் ஆவர்.
அவர்களில் 41% பேர், 1988 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவிற்கு வந்திருந்தாலும், அவர்களில் 79% பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலேயே தங்கியுள்ளனர்.