TNPSC Thervupettagam

இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு மகஸேஸே விருது

July 28 , 2017 2677 days 1013 0
  • ஆசிய நோபல் பரிசு என்று அறியப்படும் மகஸேஸே விருதுக்கு இலங்கையைச் சேர்ந்த தமிழ் சமூக சேவகர் ஞானதீபம் ஷண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மேலும், பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றிய 4 நபர்களுக்கும், பிலிப்பின்ஸைச் சேர்ந்த நாடகக் குழுவுக்கும் இவ்வாண்டுக்கான விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மனநல ஆலோசகரான ஞானதீபம் 'கெத்ஸி' ஷண்முகம் ஈழப்போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி வருகிறார். குறிப்பாக, இலங்கையில் வன்முறையாலும் இயற்கை இடர்பாடுகளாலும் மன நலன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர் உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளிடையே கெத்ஸி ஷண்முகம் ஆற்றிய அயராத சேவையைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்படுவதாக மகஸேஸே விருதுகளை அளிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
  • கெத்ஸி ஷண்முகம் தவிர, கம்போடியாவில் உள்ள உலகப் புகழ் பெற்ற அங்கோர் வாட் கோயில் வளாகத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றிய சரித்திர ஆய்வாளர் யோஷியாகி இஷிஸாவா (79), ஏழைகளுக்கு இலவச உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்கிய டோனி டே (70), இந்தோனேசிய பழங்குடியினத்தவரிடையே தொண்டாற்றி வரும் ஆப்டன் நபாபன் (53), பிலிப்பின்ஸ் ஏற்றுமதியை அதிகரிக்க உதவிய வழக்குரைஞர் லிலியா டிலீமா (76) ஆகியோருக்கு இவ்வாண்டு மகஸேஸே விருது அளிக்கப்படுகிறது.
  • இவர்களுடன், பிலிப்பின்ஸில் மேடை நாடகங்கள் மூலம் அரசியல், சமூக எழுச்சி ஏற்படும் வகையில் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வரும் பிலிப்பீன் தேசிய கல்வி நாடக சங்கத்துக்கும் விருது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்