கென்ய நாட்டினைச் சேர்ந்த கெல்வின் கிப்டம், வரலாற்றிலேயே இரண்டாவது அதிவேக நேரம் என்ற ஒரு சாதனையினைக் கடந்து இலண்டன் மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
கெல்வின் 2 மணி நேரம், 1 நிமிடம், 25 வினாடிகள் என்ற நேரத்தில் கடந்து பெரும் சாதனையினைப் படைத்துள்ளார்.
எலியுட் கிப்சோஜ் படைத்த உலகச் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பினை அவர் 16 வினாடிகள் வித்தியாசத்தில் தவறவிட்டார்.
இதில் பெண்களுக்கான பந்தயத்தில் சிஃபான் ஹசன் வெற்றி பெற்றார்.
ஹாசன், 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 5,000 மீ மற்றும் 10,000 மீ பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார்.