September 17 , 2022
803 days
1528
- 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதியன்று மதுரையில் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்திற்கு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" என்று பெயரிடப் பட்டு உள்ளது.
- இத்திட்டம் ஏழை மக்களின் வாழ்வில் நன்மைமிக்க மாற்றத்தைக் கொண்டு வரும்.
- முதன்முதலாக, 1920 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மேயர் பிட்டி தியாகராயர் அவர்களால் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
- 1956 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் K.காமராஜ் அவர்கள் மதிய உணவு திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
Post Views:
1528