தெலுங்கானா மாநில அரசானது பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோரின் குடும்பங்களுக்கு இலவச மின்சார வழங்குதலை அதிகப்படுத்தியுள்ளது. அவர்களின் குடும்பத் தேவைகளுக்காக 101 அலகுகள் மின்சாரம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தற்பொழுது இவர்களின் குடும்பங்களுக்காக 50 அலகுகள் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மற்ற நலத் திட்டங்கள்
மஸ்ஜித்களின் இமாம்கள் மற்றும் மொசின்ஸ் ஆகியோர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் வெகுமதியானது 1500 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கமானது கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் ஓய்வு வயதை 58-லிருந்து 65 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.