TNPSC Thervupettagam

இளஞ்சிவப்புச் சந்திரன் (Super Pink Moon)

April 11 , 2020 1563 days 583 0
  • இளஞ்சிவப்புச் சந்திரன் ஆனது 2020 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக நிகழ்ந்தது.
  • “சூப்பர் மூன்” என்ற நிகழ்வானது, நிலவானது முழு நிலவாகவும் அண்மை நிலையில் இருக்கும் போதும் நிகழ்கின்றது.
  • அண்மை நிலை என்பது  நிலவானது புவிக்கு அருகில் இருக்கும் போது நிலவின் சுற்று வட்டப்பாதையின் புள்ளியைக் குறிக்கின்றது.
  • இதன் புவிக்கான சுற்று வட்டப்பாதையானது நீள்வட்ட வடிவைக் கொண்டதாகும்.
  • எனவே, முழு நிலவு பூமிக்கு அருகில் இருக்கும்போது, சூப்பர் நிலவு நிகழ்கின்றது.
  • இந்த நிலவானது முழு நிலவின் சராசரியைவிட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் காணப்படுகின்றது.
  • ஏப்ரல் சூப்பர் நிலவானது இளஞ்சிவப்புச் சந்திரன் என்று அழைக்கப் படுகின்றது. கிழக்கு வட அமெரிக்காவிற்குச் சொந்தமான இளஞ்சிவப்பு மலரின் நினைவாக இதற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
  • எனவே, ஏப்ரல் மாதத்தில் சூப்பர் நிலவானது இந்த மலரிலிருந்து இப்பெயரைப் பெற்றுள்ளது.
  • இது மலரின் நிறத்தைக் குறிக்கின்றதே தவிர, நிலவின் நிறத்தைக் குறிக்க வில்லை.

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்