சென்னையில் பெண்களுக்காகப் பெண்களால் இயக்கப்படும் ‘பிங்க் ஆட்டோரிக்சா - இளஞ்சிவப்பு நிற மூன்று சக்கர வாகனங்களை’ வாங்குவதற்கு தமிழக அரசு பகுதி அளவு நிதியுதவி அளித்துள்ளது.
இது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் 250 பெண்களுக்கு CNG/கலப்பு வகை எரிபொருளில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதற்கு தலா 1 லட்சம் ரூபாய் மானியமாக அரசு வழங்கும்.
25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப் படும்.
இதன்படி விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும், என்பதோடு SSLC (இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ்) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.