இளம்பெண்கள் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை 2024
August 8 , 2024 107 days 196 0
காதல் சார் உறவில் இருக்கும் இளம் பருவ வயதுப் பெண்களில் நான்கில் ஒரு பங்கினர் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையானது, அவர்களில் 24% பேர் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தனது நெருங்கிய துணைவரால் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்றும், 16% பேர் கடந்த ஆண்டில் அது குறித்துப் புகாரளித்துள்ளனர் என்றும் இது குறிப்பிடுகிறது.
இந்த விகிதங்கள் ஓஷனியாவைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவில் அதிகமாக உள்ளன என்பதோடு பப்புவா நியூ கினியா என்ற நாட்டில் 49% பெண்களும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் 42% பெண்களும் தனது நெருங்கியத் துணைவரால் இந்த வன்முறையை எதிர்கொண்டதாகப் புகாரளித்துள்ளனர்.
10% புகார் பதிவுகளுடன் ஐரோப்பாவில் மிகக் குறைந்த விகிதம் பதிவாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 5 இளம் பெண்களில் ஒருவருக்கு (19%) குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து வைக்கப் பட்டுள்ளது.