அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அயர்ஸில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை ஜெர்மி லல்ரின்னுங்கா வென்றுள்ளார்.
இவர் ஆண்களுக்கான 62 கிலோ பிரிவின் குரூப் A-யின் பளுதூக்கும் போட்டியில் ஒருங்கிணைந்த எடையான 274 கிலோவை தூக்கினார்.
இது ஷாஹு துஷார் மேனே, மெஹுலி கோஷ் (துப்பாக்கி சூடுதல்) மற்றும் தபாபி தேவி தங்க்ஜம் (ஜூடோ) ஆகியோர் பெற்ற வெள்ளிப் பதக்கங்களுடன் சேர்த்து ப்யூனஸ் அயர்ஸில் இந்தியாவின் நான்காவது பதக்கம் ஆகும்.