டெல்லியிலுள்ள மத்திய பூங்காவில் இளைஞர் திருவிழாவின் 7வது பதிப்பு “விரும்புவோம் வாழ்வோம்” (Let Live Love) என்பதைக் கருத்துருவாகக் கொண்டு பிப்ரவரி 22, 2018 அன்று தொடங்கியது.
சாகித்யா கலா பரிஷத், கலை, பண்பாடு, மொழித்துறை (Department of Art, Culture, Language), டெல்லி அரசு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி 6 நாட்கள் நடக்கும்.
இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஆண்டுக்கான இந்நிகழ்ச்சி, நேயமுறுவதற்கான விடுதலையைக் (Freedom to Love) கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த விழாவில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள், டெல்லியிலுள்ள இளைஞர்களுக்கு “நேயமுறுவதற்கான விடுதலை” (Freedom to Love) என்ற செய்தியைக் கொண்டு சேர்க்கும்.