TNPSC Thervupettagam

இளையபெருமாள் நினைவு மண்டபம்

April 20 , 2023 458 days 239 0
  • தலித் இனத் தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவருமான L. இளைய பெருமாளின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் தமிழக அரசு நினைவு மண்டபத்தினை அமைக்க உள்ளது.
  • இவர் பட்டியலினச் சமூகத்தின் உரிமைகளுக்காகப் பாடுபட்டதோடு, தனது பள்ளிப் பருவத்தில் கூட ‘இரண்டு பிரிவினருக்காக தனித்தனியாக தண்ணீர் பானை வைக்கும் ஒரு முறைக்கு' எதிராக கிளர்ந்தெழுந்து அதற்கு எதிராகப் போராடினார்.
  • 1940 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பழைய தென் ஆற்காடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நிலவிய பல்வேறு சமூகப் பிரச்சனைகள் தொடர்பாக பல போராட்டங்களை இளைய பெருமாள் முன்னெடுத்து நடத்தினார்.
  • காங்கிரஸில் சேர்ந்த இவர் தனது 27வது வயதில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததோடு, எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
  • 1965 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட பட்டியல் சாதியினர் தொடர்பான தீண்டாமை ஒழிப்பு, பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு தொடர்பான குழுவின் தலைவராகவும் இவர் இருந்தார்.
  • முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள், 1998 ஆம் ஆண்டில் இளையபெருமாளுக்கு முதலாவது ‘அண்ணல் அம்பேத்கர் விருதினை’ வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்