தலித் இனத் தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவருமான L. இளைய பெருமாளின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் தமிழக அரசு நினைவு மண்டபத்தினை அமைக்க உள்ளது.
இவர் பட்டியலினச் சமூகத்தின் உரிமைகளுக்காகப் பாடுபட்டதோடு, தனது பள்ளிப் பருவத்தில் கூட ‘இரண்டு பிரிவினருக்காக தனித்தனியாக தண்ணீர் பானை வைக்கும் ஒரு முறைக்கு' எதிராக கிளர்ந்தெழுந்து அதற்கு எதிராகப் போராடினார்.
1940 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பழைய தென் ஆற்காடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நிலவிய பல்வேறு சமூகப் பிரச்சனைகள் தொடர்பாக பல போராட்டங்களை இளைய பெருமாள் முன்னெடுத்து நடத்தினார்.
காங்கிரஸில் சேர்ந்த இவர் தனது 27வது வயதில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததோடு, எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
1965 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட பட்டியல் சாதியினர் தொடர்பான தீண்டாமை ஒழிப்பு, பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு தொடர்பான குழுவின் தலைவராகவும் இவர் இருந்தார்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள், 1998 ஆம் ஆண்டில் இளையபெருமாளுக்கு முதலாவது ‘அண்ணல் அம்பேத்கர் விருதினை’ வழங்கினார்.