இளையோர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் 2024
August 25 , 2024 90 days 137 0
உலகளாவிய இளையோர்களின் வேலைவாய்ப்பின்மை ஆனது, 15 ஆண்டுகளாக மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது என்பதோடு அது தொடர்ந்து வீழ்ச்சியடையும் வாய்ப்பும் உள்ளது.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் இந்த அறிக்கையானது, "இளையோருக்கான உலகளாவிய வேலை வாய்ப்புப் போக்குகள் 2024 (இளையோருக்கான GET) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகளவில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 64.9 மில்லியன் மக்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருந்தனர்.
2023 ஆம் ஆண்டில் கிழக்கு ஆசியாவில் இருந்த இளையோர்களின் வேலை வாய்ப்பின்மை விகிதமான 14.5 சதவிகிதம் என்பது வரலாறு காணாத வகையிலான அதிகளவாகும்.
தெற்காசியாவில் 2023 ஆம் ஆண்டில், இப்பகுதியில் உள்ள ஐந்தில் ஒரு இளைஞர் (20.4%) ‘வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் இல்லாத’ நிலையில் இருந்தனர்.
2025 ஆம் ஆண்டில், இப்பகுதியில் இளையோர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 13.7% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளையோர்களின் வேலை வாய்ப்பின்மை விகிதம் ஆனது 2019 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 2023 ஆம் ஆண்டில் அதிகமாக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியிலான வேலை வாய்ப்பின்மை விகிதம் கிட்டத்தட்ட சமமாக இருந்தது (இளம் பெண்கள் மத்தியில் 12.9 சதவீதம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் 13 சதவீதம்).
அதிக வருமானம் கொண்ட சில நாடுகளில் பாதுகாப்பான ஊதியம் பெறும் வேலை வாய்ப்பில் பணி புரியும் இளைஞர்களின் பங்கு கணிசமாக அதிகமாக உள்ளது (2023 ஆம் ஆண்டில் 76%).