TNPSC Thervupettagam

இளையோர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி

December 4 , 2022 721 days 373 0
  • இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் 73 நாடுகளைச் சேர்ந்த 600 குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டனர்.
  • இந்தப் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் பெற்ற எட்டுப் பதக்கங்களும் வேறு எந்த நாடும் பெறாத ஒரு அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
  • இந்திய குத்துச்சண்டை வீரர்களான விஸ்வநாத் சுரேஷ், வன்ஷாஜ், தேவிகா கோர்படே ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
  • பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் பாவ்னா ஷர்மா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • ஆஷிஷ் (54 கிலோ) வெள்ளிப் பதக்கத்தினை வென்ற மற்றொரு இந்தியர் ஆவார்.
  • தமன்னா (50 கிலோ), குஞ்சராணி தேவி தொங்கம் (60 கிலோ), முஸ்கான் (75 கிலோ) மற்றும் லஷு யாதவ் (70 கிலோ) ஆகியோர் இதில் முறையே நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
  • நடப்பு ஆண்டு போட்டியில் 11 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் (10), அயர்லாந்து (7) மற்றும் கஜகஸ்தான் (7) ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்