TNPSC Thervupettagam

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கு

January 5 , 2024 196 days 257 0
  • 1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ் உள்ள கடமைகளை இஸ்ரேல் மீறுவதாக அறிவிக்கும் வகையிலான ஒரு அவசர உத்தரவினை விடுக்குமாறு சர்வதேச நீதிமன்றத்தை (ICJ) தென்னாப்பிரிக்கா நாடியது.
  • ICJ என்பது உலக நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் தளமாகும்.
  • ‘இனப்படுகொலை’ என்ற சொல் ஆனது, இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை விதித்தல் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் 1948 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவுருக்களைப் பயன்படுத்தி வரையறுக்கப் பட்டுள்ளது.
  • தற்போதைய உடன்படிக்கையில், இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இன, பிரிவு அல்லது சமயக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் ஒரு நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பின்வரும் சில செயல்களில் ஏதேனும் ஒன்றைக் குறிக்கிறது:
    • ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது;
    • ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் சார்ந்த அல்லது மனம்  சார்ந்த பாதிப்பை ஏற்படுத்துதல்;
    • ஒரு குழுவை முழுமையான அல்லது பகுதியளவிலான நேரடி அழிவைக் கொண்டு வருவதற்காக உணர்வுடன் அக்குழுவின் உறுப்பினர்களை துன்புறுத்துதல்;
    • குழுவிற்குள் புதியக் குழந்தை பிறப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்;
    • குழுவினைச் சேர்ந்த குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறு குழுவிற்கு மாற்றச் செய்தல்.
  • 2019 ஆம் ஆண்டில், காம்பியா நாடானது, இஸ்லாமியக் கூட்டாண்மை அமைப்பின் சார்பாக, மியான்மர் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்