TNPSC Thervupettagam

இஸ்ரேல் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையேயான அமைதி ஒப்பந்தம்

September 17 , 2020 1440 days 616 0
  • அமெரிக்காவினால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் முழுமையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திட வேண்டி  இஸ்ரேல் மற்றும் பக்ரைன் ஆகிய 2 நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
  • இதன் மூலம் இஸ்ரேலுடன் ராஜ்ஜிய உறவுகளை ஏற்படுத்துவதற்காக ஒப்புக் கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்துடன் பக்ரைனும் சேர்ந்துள்ளது.
  • அரபு உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்சினையின் காரணமாக இஸ்ரேலுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வந்தன.
  • எனினும், பக்ரைன் ஆனது இஸ்ரேலின் உரிமையை 2018 ஆம் ஆண்டு மே அன்று அங்கீகரித்தது.
  • 1979 ஆம் ஆண்டில் எகிப்தும் 1994 ஆம் ஆண்டில் ஜோர்டானும் 2020ல் ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ள 3 அரபு நாடுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்