இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) இரண்டாவது விண்வெளி நிலையம் ஆனது தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப் பட்டினத்தில் அமைக்கப்படவுள்ளது.
இது தனியார் துறையினால் உருவாக்கப்பட்ட சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனங்களை விண்ணில் ஏவுவதற்காக (SSLVs) பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும்.
இன்னும் இரண்டு வருடங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்படும்.
SSLV என்பது 500 கி.மீ. சுற்றளவு கொண்ட கோள்களின் சுற்றுப்பாதையில் தோராயமாக 500 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தும் திறன் கொண்ட மூன்று எரிபொருள் நிலைகள் கொண்ட ஒரு ஏவு வாகனமாகும்.