TNPSC Thervupettagam

இஸ்ரோவின் சந்திரயான் – 2 மற்றும் நாசாவின் சந்திர ஆய்வுப் பணிக்கான விண்கலம் (LRO)

November 24 , 2021 1006 days 413 0
  • இஸ்ரோவின் சந்திரயான்-2 மற்றும் நாசாவின் சந்திர ஆய்வுப் பணிக்கான விண்கலம் (LRO - Lunar Reconnaissance Orbiter) ஆகியவை துருவ சுற்றுப்பாதையில் நிலவினைச் சுற்றி வருகின்றன.
  • இரு விண்கலங்களும் ஒன்றோடொன்று நெருங்கி வந்தன.
  • சந்திரயான்-2 விண்கலமானது கடந்த 2 ஆண்டுகளாக நிலவைச் சுற்றி வருகிறது.
  • இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய இரு நிறுவனங்களும் அவற்றினுடைய விண்கலங்கள் மோதிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக ஒரு மோதல் தவிர்ப்பு நடவடிக்கைக்கு ஒப்புக் கொண்டன.
  • மோதல் தவிர்ப்பு நடவடிக்கை என்பது, பூமியின் சுற்றுப்பாதையிலுள்ள செயற்கைக் கோள்கள், மற்ற செயற்கைக்கோள்கள் மற்றும் இதர விண்வெளிக் கழிவு சாதனங்கள் உள்ளிட்ட விண்பொருட்களுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்கான ஒரு பொதுவான நடவடிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்