பிரெஞ்சு விண்வெளி முகமையான சிஎன்இஎஸ் (விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையம்) நிறுவனத்தின் பங்கேற்புடன் 2025 ஆம் ஆண்டில் இஸ்ரோ தனது வெள்ளிக் கிரக திட்டத்தைத் தொடங்க உள்ளது.
இந்திய ஆய்வுப் பணியில் ஒரு பிரெஞ்சு விண்வெளிப் பொருளானது (French payload) விண்ணிற்கு அனுப்பப் படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவும் பிரான்சும் இஸ்ரோவின் மனித விண்வெளித் திட்டமான ககன்யான் திட்டத்திலும் இணைந்து பணியாற்றி வருகின்றன.