TNPSC Thervupettagam

இஸ்ரோவின் 100-வது செயற்கைக்கோள்

January 15 , 2018 2505 days 883 0
  • பி.எஸ்.எல்.வி. சி-40 என்ற செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதனை பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் வரிசையின் 42-வது ராக்கெட் விண்ணுக்கு சுமந்துச் சென்றது.
  • இது 31 செயற்கைக்கோள்களை இரு வேறு சுற்றுவட்டப் பாதைகளின் மீது நிலைநிறுத்தியிருக்கிறது.
  • முதல்நிலை தாங்குசுமையுடைய பி.எஸ்.எல்.வி. சி-40 செயற்கைக்கோளானது, தொலை உணர்தலுக்கான கார்ட்டோசாட்-2 வரிசையைச் சேர்ந்த நாட்டின் நான்காவது செயற்கைக்கோளாகும். இது இந்தியாவின் 100-வது செயற்கைக்கோள் ஆகும். மேலும், இது 2018-ஆம் ஆண்டிற்கான இஸ்ரோவின் முதலாவது செயற்கைக்கோளும் ஆகும்.
  • இந்த செயற்கைக்கோள் தவிர்த்து 30 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவற்றினுள் பல்வேறு நாடுகளினுடைய 28 சிறிய செயற்கைக்கோள்களும் அடங்கும். இது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து, கொரியா மற்றும் கனடா ஆகிய நாடுகளினுடைய செயற்கைக் கோள்களைச் சுமந்து சென்றுள்ளது.
  • கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் எடுத்து அனுப்பும் புகைப்படங்கள் பல்வேறு நில மற்றும் புவித் தகவல் அமைப்பு பயன்பாடுகளை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்