இஸ்ரோ நிறுவனமானது அதன் மிகப்பெரிய LVM3 ஏவுகலத்தினைக் கொண்டு, ஒரே ஏவுதலின் மூலம் வெவ்வேறு உயரங்களில் உள்ள ஒரு சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்களை செலுத்துவதற்கு உதவுகின்ற ஒரு மிகவும் முக்கியமான சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
'பன்மய எரிமூட்டு அமைப்பின்’ உருவாக்கத்தின் காரணமாக இந்த மீள் தொடக்கச் செயல்பாட்டுத் திறன் ஆனது சாத்தியமானது.
இது LVM3 ஏவுகலத்தில் உள்ள 'CE-20' கிரையோஜெனிக் எஞ்சினை மீள் தொடங்க செய்ய உதவும்.
LVM3 ஏவுகலத்தின் இறுதிக் கட்டத்தில் கிரையோஜெனிக் எஞ்சின் உள்ளது என்ற ஒரு நிலையில் இது செயற்கைக் கோள்களை விண்வெளியில் வெவ்வேறு நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதைகளில் (உயரத்தில்) நிலைநிறுத்துவதற்கு அவசியமானதாகும்.