PSLV-C60 ஏவுகலத்தினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
இது முன்னோடி மிக்க விண்கல இணைப்பு பரிசோதனை கலத்தினை (SpaDeX) சுமந்து செல்கிறது.
இந்த கலமானது SDX01 (சரிபார்ப்பு கலம்) மற்றும் SDX02 (இலக்கு கலம்) என்ற இரண்டு விண்கலங்களை நிலை நிறுத்தியுள்ளது.
இரண்டு சிறிய விண்கலங்களைப் பயன்படுத்தி விண்வெளி விண்கல இணைப்புத் துறையில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்தி நிரூபிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெற்றிகரமான விண்கல இணைப்பு மற்றும் நிலை நிறுத்தலுக்குப் பிறகு, இரண்டு செயற்கைக் கோள்களுக்கு இடையேயான மின் ஆற்றல் பரிமாற்றம் மேற் கொள்ளப் படும்.
இந்த இரண்டு செயற்கைக் கோள்களின் இணைப்புத் துண்டிக்கப்பட்டு பிரிக்கப்பட்ட பிறகு, இரண்டு ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள அவற்றின் செயல்பாட்டுச் சுழற்சிக்காக அந்தந்த கலங்களின் செயல்பாட்டினைத் தொடங்கும்.
இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான ‘பாரதிய அந்தரிக்ஸ் நிலையம்’ (BAS) அமைப்பதற்கான இஸ்ரோவின் நோக்கத்திற்கு PSLV-C60 கலத்தின் இந்த ஏவுதல் மிக முக்கியமானதாகும்.