இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது சமீபத்தில் நைனிடாலின் ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவன கண்காணிப்பு அறிவியல் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது விண்வெளிச் சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் வானியற்பியல் துறை ஆகியவற்றின் மீதான ஒத்துழைப்புடன் செயல்படுகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவின் விண்வெளிச் சொத்துக்களை விண்வெளிச் சிதைவு அல்லது விண்வெளிக் குப்பை என்ற அச்சுறுத்தல்களிலிருந்துப் பாதுகாப்பதாகும்.
விண்வெளிச் சூழ்நிலை விழிப்புணர்வின் கீழ், சிதைவுகள் அல்லது குப்பைகள் கண்காணிப்பு, மோதல் தவிர்ப்பு, செயற்கைக் கோள் ஒழுங்கின்மையைக் கண்டறிதல், விண்வெளி வானிலை நிலையத்திலிருந்து வரும் அச்சுறுத்தல்களைக் கண்காணித்தல், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களைக் கணித்தல் ஆகியவற்றின் மீது இந்தியா கவனம் செலுத்துகிறது.