தரகு நிறுவனமான ICICI பத்திரங்கள் நிறுவனம் (ISec -ICICI Securities), உடனடியாக தொகையை வரவு வைக்கும் அம்சமான இ-ஏடிஎம் வசதியைத் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் (BSE - Bombay Stock Exchange) பங்குகளை விற்பனை செய்யும்போது நிகழ்நேரத்தில் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்படும் வசதியை இது செயல்படுத்தும்.
இந்த அம்சமானது முந்தைய T+2 நாட்கள் காத்திருப்புடன் ஒப்பிடும்போது சில்லறை முதலீட்டாளர்கள் BSE-ல் பங்குகளை விற்று உடனடியாக அவர்களுக்கு பணம் கிடைக்கச் செய்கின்றது.
இந்த பண வழங்கீடானது, நாள் ஒன்றுக்கு ஒரு வாடிக்கையாளருக்கு ரூபாய் 50,000 வரை தினசரி வரம்பாகக் கொண்டு, 30 நிமிடங்களுக்குள் அது நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும்.