மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இ-சனத் இணைய வாயிலையும் தேசிய கல்விக் களஞ்சியத்தையும் ஒருங்கிணைத்துள்ளது.
இ-சனத் அமைப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு தொடர்புகளற்ற, பணமற்ற மற்றும் காகிதமற்ற ஆவணச் சான்றொப்ப சேவைகளை அளித்து, ஆவணங்களின் நேரடியான சரிபார்ப்பினை மேம்படுத்திட உறுதி பூண்டுள்ளது.
இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டுக்குள் இரண்டு லட்சம் சர்வதேச மாணவர்களுக்குஇந்திய கல்வி முறையைஊக்குவிக்க எண்ணுகிறது. மொத்த இடங்களில் 55 சதவிகித இடங்கள் திறன் அடிப்படையில் கட்டணத் தள்ளுபடியின் கீழ் அளிக்கப்படும்.
ஆனாலும் இந்த திட்டம் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையை பாதிக்காது.
மேலும் இ-சனத் திட்டம் பணமற்ற செலுத்து முறையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக வரியில்லாத ரசீது இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.