மதராஸ் ஐ.ஐ.டி நிறுவனத்தின் உதவி பெறும் ஒரு புத்தாக்க தொடக்க நிறுவனமான இ-பிளேன் என்ற நிறுவனமானது நகர்ப்புறப் பயணத்திற்காக வேண்டி ஒரு பறக்கும் டாக்ஸியை வடிவமைத்துள்ளது.
இது மக்களைத் தங்கள் அவர்கள் சேர வேண்டிய இடத்திற்கு
10 மடங்கு வேகமாக,
பாதுகாப்பாக,
குறைந்த பொருளாதார செலவில்,
சத்தமில்லாமல் மற்றும்
சுற்றுச்சூழல் பாதிப்பில்லாதவாறு கொண்டு செல்ல முடியும்.
பேட்டரி மூலம் இயங்கும் இந்த டாக்ஸியானது 200 கிலோ தாங்குசுமை கொண்டிருக்கும்.
இது இரண்டு பயணிகளுக்கு இடமளிக்கும்.
இதன் இறுதி முன்மாதிரி 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.