இந்திய ரயில்வேயானது இ-திரிஷ்டி என்ற மென்பொருளை அறிமுகப் படுத்தியுள்ளது. இது நாட்டின் எந்த ஒரு இடத்திலும் உள்ள ரயில்களின் காலந் தவறாமை, சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மூலமாக கிடைக்கும் வருவாய் மற்றும் இதர பல விசயங்களை மத்திய இரயில்வே அமைச்சகம் கண்காணிக்க உதவுகிறது.
இந்த மென்பொருளானது இந்திய இரயில் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (IRCTC - Indian Rail Catering and Tourism Corporation) சமையலறைகளோடு நேரலையில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது முன்பதிவு செய்த மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகளின் நிகழ்நேர நிலையையும் அளிக்கும்.
இந்த மென்பொருளானது ரயில்வே தகவல் அமைப்புக்கான மையத்தால் உருவாக்கப்பட்டது.