’விக்கிலீக்ஸ்’-ன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈகுவடார் தனது நாட்டின் குடியுரிமையினை வழங்கியிருக்கிறது. இவர் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக லண்டனில் உள்ள அந்நாட்டின் தூதரகத்தில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகிறார்.
மத்திய லண்டனின் நைட்ஸ்பிரிட்ஜ்ஜில் உள்ள லத்தீன் அமெரிக்க நாட்டின் தூதரகத்தினுள் ஐந்தரை ஆண்டுகளாக நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வரும் 46 வயதான இவர் இயற்கையான முறையில் குடியுரிமையினைப் பெற்றுள்ளார்.