TNPSC Thervupettagam
December 31 , 2017 2523 days 849 0
  • இந்தியா மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளின் ராணுவங்களுக்கு இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி (EKUVERIN) கர்நாடகாவின் பெல்காவியில் நடத்தப்பட்டது.
  • இக்கூட்டுப் பயிற்சியின் நோக்கம் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ராணுவப் பயிற்சி நடவடிக்கையை இரு நாட்டு ராணுவத்திற்கிடையே ஏற்படுத்துதலாகும்.
  • இந்தப் பயிற்சி பெல்காமில் கூட்டு நடவடிக்கைகள் மையம் ஒன்றை ஏற்படுத்த இரு நாட்டு இராணுவத்திற்கும் வாய்ப்பைத் தந்துள்ளது. நண்பர்கள் என்று மாலத்தீவுகளின் மொழியில் பொருள்படும் இந்த ஈகுவெரின் ராணுவ கூட்டு பயிற்சி நடவடிக்கையானது இந்திய தரைப்படை மற்றும்மா
  • லத்தீவுகள் தேசிய ராணுவப் படை ஆகியவற்றிற்கிடையே 2009ம் ஆண்டிலிருந்து ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் என்ற மாற்று வருட முறையில் இரு நாடுகளில் மாறி மாறி நடத்தப்படுகின்றது.
  • இந்தியப் பெருங்கடலின் சிறிய நாடான மாலத்தீவில் உள்ள லம்மு என்ற பவளத் தீவில் காதோ என்ற பகுதியில் கடந்த ஆண்டு இந்த கூட்டுப்பயிற்சி நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்