TNPSC Thervupettagam

ஈக்வேடர் பரிசு 2021 – இந்திய நிறுவனங்கள்

July 21 , 2021 1101 days 489 0
  • ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தி நிறுவனம் மற்றும் சினேகாகுன்ஜா அறக் கட்டளை உள்ளிட்ட 10 நிறுவனங்கள் மதிப்புமிக்க 2021 ஆம் ஆண்டின் ஈக்வேடர் பரிசினை வென்றுள்ளன.
  • வளங்காப்பு மற்றும் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கம் போன்ற துறைகளில் அவை ஆற்றியப் பணிக்காக இந்த நிறுவனங்களுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கத்தின் வளங்காப்பு மற்றும் நிலையான பயன்பாடு மூலம் வறுமையைக் குறைப்பதற்கான சமுதாய முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கச் செய்வதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் அவையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விருதினை வழங்கி வருகிறது.
  • ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தி நிறுவனமானது தமிழகத்தின் நீலகிரி உயிர்க் கோள காப்பகத்தினைச் சேர்ந்த பழங்குடியினரால் நடத்தப்படும் ஒரு நிறுவனம் ஆகும்.
  • சினேகாகுன்ஜா அறக்கட்டளையானது மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கர்நாடக கடற்கரையில் உள்ள எளிதில் பாதிப்புக்குள்ளாகும் ஈரநிலங்கள் மற்றும் கடற்கரைச் சூழ்நிலைகளை 45 ஆண்டுகளாகப் பாதுகாத்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்